Monday 21 January 2013

பாரிஸில் நடை பெற்ற உலக திரைப்பட விழாவில்


பாரிஸில் நடை பெற்ற உலக திரைப்பட விழாவில் 
வழக்கு எண் 18/9 சிறந்த திரைப்படமாக தேர்வு பெற்றுள்ளது 
இந்த விருது பெறும் முதல் இந்திய திரைப்படம் 

முதல் தெற்கு ஆசிய திரைப்பட விழா - பாரீஸ்
பாரீஸில் ஜனவரி(2013) 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை "முதல் தெற்காசிய திரைப்பட விழா" (SAFF) நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து திரைப்படங்கள் பங்கேற்றன.
வழக்கு எண் 18/9 - முதல் இந்தியத் திரைப்படம்
இந்தியத் திரைப்படம் என்றாலே இந்தித் திரைப்படம் என்ற வரம்பைத் தாண்டி நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு ஆசிய மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா லிட் நிறுவனம் தயாரித்து, சமீபத்தில் வெளிவந்த "வழக்கு எண் 18/9" சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் N. லிங்குசாமியும் இயக்குநர் பாலாஜி சக்திவேலும் பாரீஸில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment